
மரபுத்தொடர்கள்
Authored by Rajesh Somu
World Languages
9th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தபோது, ஜனாதிபதி மாளிகையில் தினமும் மாணவர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக அவரைச் சந்திக்க வந்திருந்தனர். ஒவ்வொருவரும் தங்களுடைய கனவுகளைக் கூறினர். பார்வையிழந்த ஸ்ரீகாந்த் என்ற உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன் ‘’தான் இந்தியாவின் முதல் பார்வையற்ற ஜனாதிபதியாக வேண்டும்’’ என்று தன் விருப்பத்தைக் கூறினான்
1) கலாம் அவர்கள் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த மாணவர்களைச் சந்தித்தற்கான காரணம் என்ன?
மலைவாழ் மாணவர்களின் குறையைத் தீர்ப்பதற்காக
அவர்களைக் குழுவாகப் பார்க்க வேண்டும் என்பதால்
மாணவர்களின் இலட்சியங்களை அறிந்து கொள்வதற்காக
இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்ததால்
2.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
அவனது உயர்ந்த எண்ணத்தை அறிந்து மகிழ்ந்த கலாம் அவர்கள், அவனிடம்வாழ்க்கையில் நீ என்னவாக வேண்டும் என நினைக்கிறாயோ, அதை அடைய வாழ்க்கையில் மிகப் பெரிய இலட்சியம் வேண்டும்; அந்த இலட்சியத்தை அடைய அறிவைத் தேடிப் பெறுவதுடன் விடாமுயற்சியுடன் கடுமையாக உழைக்க வேண்டும். இறுதியாக, தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும். இந்தப் பண்புகள் இருந்தால், நீ எண்ணிய இலட்சியத்தை அடையலாம்’’ என அவனை வாழ்த்தினார். ஸ்ரீகாந்த் கடுமையாக உழைத்துப் பள்ளிப் படிப்பை முடித்தான். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கணிணி தொழில்நுட்பவியல் பிரிவில் படிக்க விரும்பினான். அதனால் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் நடத்தப்பட்டத் தேர்வில் மலைவாழ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் போட்டியிட்டுத் தேர்ச்சி பெற்று, பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி பெற்றான்.
2) தோல்வி மனப்பான்மைக்குத் தோல்வி கொடுத்து வெற்றி பெற வேண்டும்-என்ற வாக்கியம் உணர்த்தும் பொருளென்ன?
தோல்வி மனப்பான்மைக்குத் தோள் கொடுக்க வேண்டும்
தோல்வி மனப்பான்மையை மனதில் கொண்டால் வெற்றி பெற முடியாது
தோல்வி மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்
தோல்வியே வெற்றிக்கு அறிகுறி
3.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
அவனது அறிவுத்திறமையைப் பாராட்டி, தனியார் நிறுவனம் ஒன்று அவனை அமெரிக்காவுக்கு அனுப்பிப் படிக்க வைத்தது. பின், அந்நிறுவன அதிகாரி, உனக்கு வேலை தயாராக இருக்கிறது என மின்னஞ்சல் அனுப்பினார். அதற்கு, “பார்வையற்ற முதல் ஜனாதிபதி பதவியை அடைய முடியாவிட்டால், உங்களது வாய்ப்பைக் கண்டிப்பாகப் பயன்படுத்திக் கொள்வேன்’’ என அந்த மாணவன் பதில் அனுப்பினான். இதிலிருந்து, நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, உன்னால் வெற்றி பெற முடியும் என்பதை அறியலாம்.
3) தனியார் நிறுவனம் கண் பார்வையற்ற ஸ்ரீகாந்துக்கு வேலை கொடுக்கக் காரணம் என்ன?
ஸ்ரீகாந்த் ஜனாதிபதியாக பதவி வகிக்க விரும்பியதால்
வளர்ந்த உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் போட்டியிட்டதால்
அவனது அறிவுத்திறமையை உணர்ந்ததால்
கண்பார்வை இல்லாமல் இருந்தும் வெற்றிபெற்றதால்
4.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
கலை நம் உயிர்நாடி. கலை இல்லையென்றால் வாழ்வில் சுவையிருக்காது. திரைப்படம் ஓர் அற்புதமான கலை. உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும் மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் உலகமொழி திரைப்படம். அது உதடுகள் பேசும் மொழியன்று. உள்ளத்தால் பேசி உணர்ச்சிகளால் உருவாகும் மொழி. அதனால், மக்களை வசப்படுத்தும் ஆற்றல் திரைப்படத்திற்கு உண்டு.
4) திரைப்படம் எத்தன்மையால் மக்களைத் தன்பால் ஈர்க்கும் திறன் பெற்றுள்ளது?
திரைப்படம் ஒரு அற்புதக் கலை என்பதால்
உலகில் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்படுவதால்
மனதால் பேசி உணர்வுகளை வெளிப்படுத்துவதால்
திரைப்படத்தைப் பார்த்ததும் எளிதில் புரிந்துகொள்ள முடிவதால்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எட்வர்டு மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையைத் திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்றார். பின்னர், சிறு சிறு காட்சிகளைப் படங்களாக்கி ஊமைப்படங்களாக ஒளிபரப்பினார். ஊமைப்படங்களைப் பேசும் படங்களாக மாற்றுவதற்கு பல்வேறு அறிவியல் அறிஞர்கள் அயராது உழைத்தார்கள். அதனால், திரைப்படத்துறை மாபெரும் வளர்ச்சியை எட்டியது. திரைப்படத்திற்குரிய கதையுடன் கதைமாந்தர், கதை, உரையாடல், பாடல் ஆகியவை ஆயத்தம் செய்யப்பட்டன. நடிகரின் குரல் ஏற்றதாக இல்லாவிடில் மற்றொருவர் குரல் தரும் முறை கொண்டுவரப்பட்டது. நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும், படம் முடியும்வரை உழைக்கும் திறன் உடையவரை இயக்குனர் என்பர். அவருக்கு உதவியாகத் துணை இயக்குனர் பணியாற்றுவார். படம் எடுத்தலைப் படப்பிடிப்பு என்பர். திரைப்படத்துறை இவ்வாறு காலத்திற்கேற்ப வளர்ச்சி பெற்று வருகிறது.
5 ) திரைப்படத்துறை வளர்ச்சி கண்டதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்?
ஆங்கிலேயர்கள்
அறிவியல் அறிஞர்கள்
இயக்குனர்கள்
கதைமாந்தர்கள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • Ungraded
மிருகங்களின் வாழ்வுமுறை லட்சக்கணக்கான வருடங்களாக எந்தவொரு பெரிய மாற்றமும் முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும்போது மனிதன் மட்டும் முன்னேறி தன்னை உருவாக்கிய இயற்கையையே ஆளும் அளவுக்குத் தன் Q11________________ சக்திகளையும் வளர்த்துக்கொண்டுள்ளான்
திறமைகளையும்
செயல்களையும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • Ungraded
மனிதனை மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மிகச் சிறந்த உயிரினமாக உருவாக்கக் காரணமாக இருப்பது மொழியே. மனித நாகரிகத்தின் Q12_________________ மொழியின் பங்கு இன்றியமையாததாக இருந்துள்ளது
உருவமைப்பில்
வளர்ச்சியில்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?